Monday, 29 September 2014

தீர்ப்பு - சொத்து குவிப்பு வழக்கு

தீர்ப்பு - சொத்து குவிப்பு வழக்கு

செப்டம்பர் 27ம்  தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, பல ஊழல் அரசியல்வாதிகளின் மனதிர் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.   குற்றம் பல வருடங்களுக்கு முன்னே இடம் பெற்றிந்தாலும், அதன் பாதிப்பு என்றைக்கும் ஒன்று தான்.  இனி எடுத்துக்கொண்ட வழக்கில் நீதிபதிகள் விருப்பு வெறுப்பு இன்றி, ஊழலின் பாதிப்புக்கு ஏற்ப தண்டனை வழங்குவார்கள் என்கின்ற ஒரு நம்பிக்கையை மக்கள் மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த தீர்ப்பு.

மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தைரியத்துடனும் செயல்பட இத்தீர்ப்பு உதவினால் அதை விட ஒரு நல்ல செயல் இல்லை என்றே சொல்லலாம்.  இன்று பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருப்போர்க்கு, இனி சந்திக்க இருப்போர்க்கு அயராமல் நேர்மையாக பாடுபடவும் இது உதவும்.  மக்களுக்கு ஊடகங்கள் உண்மையை எடுத்து உரைக்க தடையாக இருப்பது ஊடகங்களின் அரசியல் சார்பு தான் என்றால் அதில் தவறில்லை.   இவ்வூடகங்களும் இனி சரியாக மக்களுக்கு உண்மையை எடுத்து கூற தவறினால் இத்தகைய தீர்ப்புகள் ஊடகங்களின் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாகும்.

இந்த தீர்ப்பு ஒரு முன்னோடியாக இனி வரும் எல்லா ஊழல் வழக்குகளுக்கும் இருக்குமேயானால், மக்களின் நம்பிக்கை ஜனநாயகத்தின் மேல் இன்னும் அதிகரிக்க  வாய்ப்பு இருப்பதோடு' அவர்கள் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களும்  எந்த ஊழலிலும் ஈடுபடாமலிருக்க உதவும்.   மக்கள் கட்சி சார்பு வேட்பாளர்களை விட்டு,  உண்மையிலே அவர்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க  வேண்டுமென்றால், இன்று ஊழல்  குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்போர் சட்டத்தினால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 
அதற்கான தண்டனையையும் அனுபவிக்க வேண்டும். 

தணிக்கை அதிகாரிகள் குற்றம் என்று சொல்லியுள்ள 2G, ஏர்செல்-maxix, காமன்வெல்த்  விளையாட்டு போட்டிகள், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்களும் அதன் முடிவினை அடைந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலை  உருவானால் தான், மக்களுக்கு ஊழல் ஒழிப்பில் நம்பிக்கை ஏற்படும். இல்லையெனில் கட்சிக்கு அல்லது குற்றம் செய்தவருக்கு ஏற்றவாறு நடவடிக்கை எனும் நிலை உருவாக வாய்ப்பு இருப்பதோடு, மக்களின் கட்சி சார்பான ஈடுபாடு என்பது வலுவடையும்.  

குற்றம் செய்தவர்கள் யாராய் இருப்பினும் தண்டனை பெறுவார்கள் என்கின்ற நிலை உருவாக  தணிக்கை அதிகாரிகள், காவல் துறையினர், CBI, நீதித் துறையினர் எல்லோருமே விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும்.  இந்த தீர்ப்பு அதற்க்கு உதவியிருக்குமேயானால்  நாட்டின் எதிர்காலத்திற்க்கு நல்லது.