Friday, 15 April 2016

தமிழக அரசியலும் தேர்தலும்

தமிழக அரசியலும் தேர்தலும் 

தமிழ மக்கள் நன்றாக சிந்தித்து தங்களது வாக்குகளை தங்கள் வாழ்வாதாரங்கள் நன்கு மேம்பட அளித்திட கிடைத்திருக்கும் வாய்ப்பே மே மாதம் நடக்க இருக்கும் தேர்தல்.  யாருக்கு வாக்களித்தால் நல்ல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தபடும் - அவை நல்ல வேலை வாய்ப்புகளையும் வருவாயையும் தரும் என்று பொறுப்போடு வாக்களிக்க வேண்டிய தருணம்.
 
தமிழகம் எல்லா துறைகளிலும்  தலை நிமிர்ந்து நின்ற நாட்கள் போய், இன்று அகில இந்திய அளவில் மிகவும் பின் தள்ளப்பட்டுள்ள நிலையில் உள்ளது.  தமிழகத்தை குத்தகை எடுத்தது போன்று திராவிட கட்சிகள் சுமார் 45 ஆண்டுகள் ஆட்சியை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லவில்லை என்பதே உண்மையாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும், மொத்த ஆட்சி காலத்தை தங்கள் சொந்த நலனுக்கு உபயோகபடுத்தியும், திட்டப்பணிகளுக்கான ஒதுக்கீடுகளை பகுதி லஞ்சங்களாக பெற்றும் மக்களை வஞ்சிதுவிட்டனர்.  தமிழகத்தை தவிர்த்து முந்தைய மத்திய அரசே இவ்வாறு அவப்பெயர் பெற்றது. உயர் தணிக்கை அதிகாரிகளால் மத்திய அரசின் பல திட்டங்களில் ஊழல் கொடிகட்டி பறந்திருப்பது தெரியவந்ததொடு, இம்மாநிலத்தில் இருந்து மத்திய அரசில் பங்கு வகித்த தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதளவும் தமிழகத்தை தலை குனிய வைத்தது. டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழன் என்றால் ஊழல் பேர்வழி என பேச வைத்தது.   மாற்று கட்சியான அ.தி.மு.க. இவர்களுக்கு எந்த அளவும் சளைத்தவர்கள் அல்ல.  ஊழல் குற்றச்சாட்டை வெளிமாநிலங்களில் விசாரிக்க வேண்டிய நிலமை.  இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.  அக்கட்சியே பல முறை அவர்களின் மந்திரிகளின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது.  பெரும்பாலும் ஏன் இந்த நடவடிக்கை என்று இதுவரை மக்களுக்கு புரியாத புதிர்.  தன்னிச்சையாக செயல்பட முடியாத மந்திரிகள் எவ்வாறு தவறுகள் மட்டும் தனியாக செய்து இருக்க முடியும்.  ஆக நிச்சயமற்ற தன்மையில் பதவியில் இருந்து இந்த மந்திரிகள் என்ன செய்து இருக்க முடியும்.   இம்மந்திரிகளை ஆட்டி வைக்கும் சர்வ வல்லமை படைத்த சக்திகள் யார்?  இந்த இரு திராவிட கட்சிகளின் பொறுப்பற்ற நடைமுறைகளால் இன்னமும் இலவச திட்டங்கள் மூலமே மக்கள் தங்கள் அன்றாடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம்.  இதில் இக்கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு எதை இவர்கள் இலவசமாக்கினார்கள் என்பதையே தேர்தல் பிரச்சாரமாக வெட்கமில்லாமல் பறை சாற்றுகின்றனர். 


மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத இக்கட்சிகள், திரையுலகின் பிரச்சினைகளை மேலும் அதிகமாக்கி, படங்களை வெளியிடுவதர்க்குக்கூட இவர்கள் காலில் விழுந்தால் தான் முடியும் என்ற நிலையை  உருவாக்கினர்.  ஆட்சியில் கவனத்தை செலுத்தாமல், திரையுலகு உள் பூசல்களில் தங்களை  இணைத்துக்கொண்டனர்.  இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பால், பஸ், மின் கட்டண உயர்வுகள்/குறைப்பு தான்.   வேலை வாய்ப்பை பற்றி சற்றும் சிந்தியாமல், அண்டை மாநிலங்களுக்கு சென்றால் தான் வாயிற்று பிழைப்பு என்று ஆக்கி விட்டனர்.   மத்திய அரசிடம் தங்களுக்கு வேண்டிய தொழில் நிறுவனங்கள், தமிழ் நாட்டில் அமைக்க தவறிய அரசுகள் இவை.    இவைகள் எல்லாம் சேர்ந்தே, மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, தொழில்/வியாபரம் சிதைந்து, மக்களுக்கு இலவசங்களை வழங்கி, அதில் ஊழலும் செய்து வாழுகின்றன இக்கட்சிகள்.  இந்த பொருளாத சீற்குலைப்பின்  சாட்சியே பல இடங்களில் நிலங்கள், வீடு  விற்பனையின்/வாங்குதலின் சரிவாக உருவெடுத்துள்ளது.  இவை போதாதென்று, மதுபான விற்பனை மூலம் வருவாய் ஈட்டி, மக்களின் செல்வத்தை சுரண்டி, அதையே மறுபக்கம் இலவசங்களுக்கு செலவிடவும் செய்தனர்.  அரசியல் எதிரிகளை இரண்டு கட்சிகளும் வன்முறையில் சந்திப்பது இன்னொரு பேராபத்து ஆகும்.  நிலங்களை ஆக்கிரமிப்பது, வன்முறையில் ஈடுபட்டு  தங்களுக்கு சாதகமாக பல காரியங்களைச் சாதித்துக்கொள்வது  அன்றாட நடை முறை ஆகி விட்டது.   இதனால் கட்ட பஞ்சாயத்துகள் அதிகரித்து, மக்கள் பீதியுடன் வாழ்வதும் நிதர்சனமான உண்மை.

மக்களின் குறைந்தபட்ச தேவைகளைக்கூட இன்னும் நிறைவேற்றாமல் அவர்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி, எதிர்பார்புகளை உண்டாக்கி, நாடகமாடிக் கொண்டிருக்கும் திரையுலகு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை எப்போது இம்மக்கள் இனம் கொண்டுகொள்வார்கள்? இவர்களுடைய ஓட்டே பெரும்பாலும் அரசை முடிவு செய்கிறது.

இந்த நிலைமையை எந்த தேசிய கட்சிகளும் மக்களுக்கு கொண்டு செல்லாமல், இத்திராவிடக் கட்சியின் முதுகினில் சவாரி செய்து கொண்டிருந்தது, அதைவிடக் கொடுமை. பல வருடங்களாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ், இக்கட்சிகளினை தங்களது ஆட்சிக்கான பெரும்பான்மை பலத்திற்கு உபயோகித்து கொண்டனர்.  முதன் முறையாக, தமிழகத்தில் பலமுனைப் போட்டி உருவாகியிருக்கிறது. உதிரிக் கட்சிகள் தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளின் பிடியிலிருந்து வெளிவந்து போட்டியிடுகின்றன.   ஆயினும் அதற்கும் ஒரு திரைஉலகு நட்சத்திரமே தலைமை தாங்க வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில்.   இங்கும் அங்குமாக பலம் பெற்றிருக்கும் பா.மா.க. எந்த கூட்டணியிலும் இல்லை.  தமிழகத்தில் இன்னமும் காலே ஊன்றாத தேசியக்கட்சி பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.   மக்களுக்கு தன்னுடைய திட்டங்களின் அவசியங்களை இன்னும் கொண்டே செல்லாத இக்கட்சி, சொல்லிகொள்ளும் அளவுக்கு தலைவர்களை தேர்தலுக்கு குறைந்த பட்சமாக ஒருவருடம் முன்பாவது முன்னிறுத்திருக்க வேண்டும்.  ஆனால் இதை இவர்கள் செய்யவில்லை.  


இக்கட்சி மத்தியில் மக்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களில் மிக முக்கியமாக ஜன் தன் யோஜனா, மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணச்சலுகைகளை  வங்கியின் மூலமாக பெறச்செய்து, இடைத்தரகர்களை அடியோடு விரட்டிவிட்டது.  (சென்னை நகர மக்கள், தங்களின் வங்கி கணக்குகளில், எந்த இடைத்தர்களும் இன்றி ஈட்டு தொகை பெற்றதே சான்றாகும்.)  ஊழலற்ற அரசாக திகழ்கிறது.    வெளிநாட்டு நேர்முக முதலீட்டு  மூலம் முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களை வகுத்துள்ளது.   தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வெகுவிரைவில் சாலைகள் மேம்படுதபட்டுள்ளன.   நிலக்கரி ஏலத்தில் மிகப்பெரிய ஊழலை நிறைவேற்றிய முந்திய மத்திய அரசின் ஏலக்கொள்கைகளை மாற்றி புதிய ஏல விதிமுறைகளின்படி  அரசுக்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளது பா.ஜா.க. அரசு.   வெளிநாட்டு விஜயங்களின் மூலமாக எல்லா நாடுகளுடணும் நல்லுறவை  வளர்த்து, வியாபார ரீதியாக புதியதொரு சாதனையைப் படைத்துள்ளது மத்திய அரசு.   கச்சா எண்ணையை சேமித்துவைக்கும் கிடங்குகள் மங்களூரில் அமைக்க UAE அரசுடன் கைகோர்த்திருக்கிறது இந்திய அரசு.   இதன் ஒரு பகுதியினை  இந்திய எண்ணெய்  உற்பத்தி தொழிலகங்களும் உபயோகிக்க முடியும்.  சுய தேவையை பூர்த்தி செய்வதற்கான பல நலத்திட்டங்களை தீட்டியுள்ள பா.ஜா. க. அரசு மத்தியில் செல்யல்படுவது போல் தமிழ் நாட்டிலும் செயல் பட மக்கள் இக்கட்சியினை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.  இலவசங்கள் தேவையில்லை திட்டங்கள் மூலம் வாழ்க்கை தரம் மேம்படவேண்டும் என்று நினைப்பவர்கள் பா.ஜா.க. க்கு வோட்டளிக்க வேண்டும்.  திராவிடக்கட்சிகள் சிறிது காலமாவது ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.  திரைப்பட நடிகர்களோ மற்றைய இத்தொழில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சியிலிருந்து சிறிதுகாலம் விலகி இருக்க இது ஒரு வாய்ப்பாகும்.





தமிழக மக்கள் இலவசங்களை புறக்கணித்து, புதிய திட்டங்கள்/தொழில்கள் மூலம் வருவாய் மேம்பட்டு, சொந்த காலில் நிற்கும் திறன் பெற இத்தேர்தலில் தாமரைச் சின்னத்தில் பா.ஜா.க. விற்கு வோட்டளிக்க வேண்டும்.

1 comment:

  1. மிக மிக தெளிவான பதிவு. 60-70 களில் த.நா. எவ்வளவு முன்னேறி இருந்தது என்பது இன்றைய இளைய தலைமுறை அறிய வாய்ப்பு இல்லை. ஆனால், உயர்ந்து நிற்கும் தொழில் சாலைகள், அணைகள், பழைய தொழில்பேட்டைகள், இவற்றை பார்க்கலாம். இதன் மூலம் எவ்வாறு த.நா. முன்பு வளமாக இருந்தது என உணரலாம். பின். இந்த இடைப்பட்ட 35-40 ஆண்டு காலத்தில் புதிதாக என்ன என்ன புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கண் கூடாக காணலாம். எந்த முன்னேற்றமும் இன்றி, இலவசங்கள் கொடுத்து, மகளிரையும், போதையில் ஆண்களையும் வைத்தது ஒரு அரசு எனில், மற்றொன்று தனது குடும்பம் கொள்ளை அடிக்கவும், மாவட்ட கட்சியினர் கட்டை பஞ்சாயத்து மூலம் பணம் சுருட்டவும் செய்தது.
    ஆகவே, தமிழக மக்கள், தங்களுக்காக இல்லாவிடினும், தங்களின் அடுத்த தலைமுறை வேலை வாய்ப்பு பெற்று, வளமாக இருக்க, இந்த இரு கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் இந்த இருவருடன் சேர்ந்து தான் இக்கொடிய செயல்களை செய்தததால், அதுவும் புறக்கணிக்க பட வேண்டியதே. மீதம் இருப்பது, பா.ஜ. கட்சி ஒன்றே. இரு வருடங்களாக எவ்வாறு அது ஊழல் இன்றி, நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது என்பது நாம் கண் கூடாக பார்ப்பது. ஆகவே, நம் அடுத்த தலை முறை சந்ததிகளை மனதில் கொண்டு, அவர்கள் எதிர் காலத்திற்கு, இம்முறை பா.ஜனதா கட்சிக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete